இந்து மதம்

   பொதுவாக இந்து மதம் பலதெய்வக் கொள்கை கொண்ட ஒரு மதம் ஆகும். இதன் நம்பிக்கையில் ஒரே கடவுள் பற்றிய சில சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. முதன்மையாக, இதில் கடவுளையும் (பிரம்மம்) படைப்பையும் (சிருஷ்டி) பற்றிய குழப்பமும் முரண்பாடும் கொண்ட சிந்தனைகள் காணப்படுகின்றன. இது வாழ்வுக்கான குறிப்பிட்ட நெறிமுறைகளை வழங்காமல் சுதந்திரமான வாழ்க்கை முறைகளை அனுமதிக்கிறது. இது அவதாரம், மறுபிறவி மற்றும் பலவித மூட நம்பிக்கைகளையும் நம்புகிறது. பின்வரும் விளக்கங்கள் இந்து மதம் ஒரு தவறான மதம் என்பதைச் சுட்டிக்காட்டும்.
தெளிவற்ற பிரம்மம்:
   இந்து மதத்தின் இயல்பே பலதெய்வ நம்பிக்கை ஆகும். இந்துக்கள் எண்ணிக்கையில் அடங்காத பல தெய்வங்களை நம்புகின்றனர். பல்வேறு மக்களினங்கள் மற்றும் குலங்களின் நம்பிக்கைகளின் கலப்பாலே இத்தகைய பலதெய்வக் கொள்கை இந்துக்களிடையே காணப்படுவதற்கு காரணம். குறிப்பாக சிவனை வழிபடும் சைவம், விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம், சக்தியை வழிபடும் சாக்தம், கணபதியை வழிபடும் கணபதீயம், ஸ்கந்தனை வழிபடும் கவுமாரம், சூரியனை வழிபடும் சவுரம் என்ற ஆறும் இந்து மதத்தின் முக்கியமான பிரிவுகள் ஆகும். இவையும் மற்றும் பல சிறு மத நம்பிக்கைகளும் இணைந்தே இந்து மதத்தை உருவாக்கி இருக்கின்றன. எனவே, இந்து மதத்தில் பலவிதங்களில் பல்வேறு மக்களினங்களிடம் தோன்றிய நம்பிக்கைகள் பரவலாக காணப்படுகின்றன.
   தற்காலத்தில் பல இந்துக்கள் பிரம்மாவைப் படைக்கும் தெய்வமாகவும், விஷ்ணுவைக் காக்கும் தெய்வமாகவும், சிவனை அழிக்கும் தெய்வமாகவும் நம்பி அவற்றை மும்மூர்த்திகள் என்றும் அழைக்கின்றனர். இந்த மும்மூர்த்திகளும் பரமாத்மா அல்லது பிரம்மம் என்று அழைக்கப்படும் பரம்பொருளால் படைக்கப்பட்ட வர்கள் அல்லது பரம்பொருளிடம் இருந்து தோன்றியவர்கள் என்று சிலர் நம்புகின்றனர். பிரம்மமே தன்னைப் பல்வேறு படைப்புகளாக உருவாக்கிக் கொண்டுள்ளது; எனவே, பிரம்மமும் சிருஷ்டியும் வெவ்வேறானவை அல்ல என்று சிலர் நம்புகின்றனர். படைப்புகள் அனைத்தும் பிரம்மத்தால் உருவாக்கப்பட்டன; எனவே, பிரம்மமும் சிருஷ்டியும் வேறுபட்டவையே என்று வேறு சிலர் நம்புகின்றனர். வெவ்வேறு புராணங்கள் வெவ்வேறு தெய்வங்களை (சிவன், விஷ்ணு அல்லது கணபதி) பிரம்மமாக சித்தரிக்கின்றன. இது பல்வேறு குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கு கிறது. மேலும் இந்துக்கள் பல்வேறு தேவர்கள், அசுரர்கள், சிறு குல தெய்வங்கள் போன்றவற்றின்மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, கடவுள் பற்றிய தெளிவான கருத்து எதுவும் இந்து மதத்தில் இல்லை என்பதே உண்மை.

சிலை வழிபாடு:
   இந்து மதத்தில் பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும், அவை ஒரே கடவுளின் பல வடிவங்கள் என்றும், பல்வேறு பெயர்களை அவைக் கொண்டிருந்தாலும் ஒரே கடவுளையே சுட்டிக்காட்டுகின்றன என்றும் இந்துக்கள் பலர் கருதுகின்றனர். "கடவுள் ஒருவரே; ஞானிகள் அவரைப் பலப் பெயர்களில் அழைக்கின்றனர்" என்று ரிக் வேதம் கூறுகிறது. மக்கள் கடவுளை எந்த ஒரு சிலை வடிவத்திலும் கண்டு வழிபடலாம், அது கடவுளைப் பற்றி தியானிக்க உதவும் என்று இந்து மதம் போதிக்கிறது. ஆனால் இது உண்மை கடவுளுக்கு எதிரானது. இந்து மத சிலைகளின் பின்னணியில், கடவுளின் மதிப்பைக் கெடுக்கும் கற்பனையான அருவருக்கத்தக்க பல கதைகள் உள்ளன. மேலும், இந்து மதத்தினர் தெய்வச் சிலைகளையே கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர். அவர்கள் சிலைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கின்றனர், சிலைகளை நீராட்டு கின்றனர், அவற்றை பால், தேன் போன்றவற்றால் அபிசேகம் செய்கின்றனர், அவற்றை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். அவர்களின் அறிவற்ற விளையாட்டுகளுக்கு எல்லையே இல்லை. 
   கற்பனையான கிரக நிலைகள், ராசிகள் ஆகியவற்றைக் கொண்டு எதிர் காலத்தை கணிக்கும் சோதிடத்தை இந்துக்கள் அனைவரும் நம்புகின்றனர். இந்த வாழ்வின் பாவ, புண்ணியங்களால் (கர்மா) வடிவமைக்கப்படும் என்று கருதப்படுகின்ற மறுபிறவிமீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத நிகழ்வுகளின் அடிப்படையில் கணிக்கப்படும் சகுனங்களின் பலன்களையும், நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல நாள், கெட்ட நாள் ஆகியவற்றையும், விதியையும் இந்துக்கள் மடத்தனமாக நம்புகின்றனர். இந்துக்களில் சிலர் இயற்கையை தெய்வமாக நம்பினாலும், அனைவருமே சிலை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். அவர்கள் யானை (கணபதி), காளை (நந்தி), பசு (காமதேனு), குரங்கு (அனுமன்), பாம்பு (நாகம்) ஆகியவற்றின் சிலைகளை தெய்வங்களாக எண்ணி வழிபடுகின்றனர். இந்துக்கள், தங்கள் தெய்வங்களின் அருளைப் பெறுவதற்காக பல்வேறு வினோத வழிபாடுகளை செய்கின்றனர். அறிவியல் கல்வியைக் கற்றாலும், அவர்கள் தங்கள் அறிவீனச் செயல்களில் இருந்து வெளியே வருவதாகத் தெரியவில்லை.

புராணங்களும் தத்துவங்களும்:
   இந்து மதத்தில் தெய்வங்களைப் பற்றிய பல்வேறு புராணக் கதைகளும், மரபுக் கதைகளும் இருக்கின்றன. அவற்றில் பலவும் கற்பனை கலந்த அருவருப்பான கதைகளாக உள்ளன. அவற்றின் பின்னணியாக விளங்குபவை மனிதரின் பிரச்சனைகளே ஆகும். இந்து புராணங்களில் விவரிக்கப்படும் சொர்க்கலோகம் மிகவும் அருவருப்பானது. அவற்றில் உள்ள தெய்வங்களின் பண்புகளும் நடத்தையும் கேவலமான வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. சில புராணங்கள் இந்து தெய்வங்களின் சிற்றின்ப ஆசைகளைப் படம்பிடித்து காட்டுகின்றன. வேறு சில கதைகள் அநீதி யானவற்றை சரியானவை போன்று சித்தரிக்கின்றன. மேலும் பல கதைகள் நம்ப முடியாத கற்பனைகளைக் கொண்டிருக்கின்றன. சான்றாக, 1) நரகாசுரன் பன்றித் தந்தைக்கும் பூமித் தாய்க்கும் பிறந்தவன், 2) ஐயப்பனின் தந்தை சிவன், தாய் விஷ்ணு, 3) குரங்கான அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தான். மேலும், அமாவாசை - பவுர்ணமி, மழை - இடி, சந்திர - சூரிய கிரகணங்கள், அறுபது சுழற்சி ஆண்டுகள் ஆகியவற்றுக்கும் அவர்களிடம் சுவாரசியமான கதைகள் உள்ளன.
   இக்காலத்தில், இந்து மதத்தின் சந்தையை உலகில் நிலைநிறுத்துவதற்காக பல்வேறு ஏமாற்று வேலைகள் செய்யப்படுகின்றன. இந்து மதத்தின் தவறான நம்பிக்கைகள் அனைத்தும் தத்துவங்களால் மூடி மறைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, விஷ்ணு வின் அவதாரக் கதைகள் பரிணாம வளர்ச்சியை சித்தரிப்பதாக திரித்துக் கூறப்படுகிறது. பல்வேறு கோயில்களின் தெய்வங்களைப் பற்றி எழுதப்பட்ட கதைகள், தற்போது வரலாறு என்று திரித்துக் கூறப்படுகின்றன. இந்துக்கள் உண்மை கடவுளைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதே இல்லை; சிலைகளே அவர்களுக்குக்கு தெய்வங்களாக தெரிகின்றன. பெரும்பாலான இந்துக்கள் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும் வரை கடவுளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. கடவுளின் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் பொழுதுதான் அவர்கள் கோயிலுக்கு சென்று தெய்வச் சிலைகளின் முன் நின்று கடவுளின் உதவியை வேண்டுவார்கள். எனவே, அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள விரும்புவதே இல்லை. இந்து தத்துவங்கள் அனைத்தும், உண்மையில் மக்களை கடவுளிடம் இருந்து வெகு தொலைவிற்கு அழைத்துச் செல்கின்றன.

கடவுளின் வார்த்தைகள்:
   "வேற்றினத்தாரின் சிலைகள் கண்களால் காணவோ, மூக்கினால் மூச்சு விடவோ, காதுகளால் கேட்கவோ, விரல்களால் தொட்டுணரவோ, கால்களால் நடக்கவோ முடியாதபோதிலும் அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று இவர்கள் எண்ணினார் கள். அவற்றைச் செய்தவர்கள் வெறும் மனிதர்களே; அவற்றை உருவாக்கியவர்கள் தங்களது உயிரைக் கடனாகப் பெற்றவர்கள். ஆனால் தங்களுக்கு இணையான ஒரு தெய்வத்தை எந்த மனிதரும் உருவாக்க முடியாது. அவர்களோ சாகக்கூடியவர்கள். நெறிகெட்ட தங்கள் கைகளால் அவர்கள் செய்வது உயிரற்றதே! தாங்கள் வணங்குகிற சிலைகளைவிட அவர்கள் மேலானவர்கள்: ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு: அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை." (சாலமோனின் ஞானம் 15:15-17)
   "வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார். மரத்தாலும் கல்லாலுமான, மனிதரின் கையால் செய்யப்பட்ட தெய்வங்களால் காணவோ கேட்கவோ உண்ணவோ நுகரவோ முடியாது. மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள். உங்களுக்குப் பெருந்துயர் உண்டாகும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இறுதி நாள்களில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி அவரது குரலுக்குச் செவிகொடுப்பீர்கள்." (இணைச்சட்டம் 4:19,28-30)

இறுதியாக...
   கடவுளின் ஒருமைத்தன்மைக்கும், உண்மை இயல்புக்கும் எதிரானதாக இந்து மதம் இருக்கிறது. மனித வாழ்வின் இலக்கைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இது தவறான போதனைகளைத் தருகிறது; மேலும் மக்களை கடவுளிடம் இருந்து அப்பால் அழைத்துச் செல்கிறது. எனவே, இந்து மதம் ஒரு தவறான மதமே என்பது உறுதியாகிறது.
மேலும் அறிய, வாசியுங்கள்: இந்து மதத்தில் கிறிஸ்தவ நம்பிக்கைகள்